ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : திருப்பூர் புறநகர் மாவட்ட காங்., கமிட்டி புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
திருப்பூர் காங்., கமிட்டி தலைமை அலுவலகத்தில், புறநகர் மாவட்ட தலைவர் (பொறுப்பு) கோபி, வட்டார நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.மாவட்ட துணை தலைவராக மணி (காங்கயம்), பழனிச்சாமி (காங்கயம்), தென்னரசு (தாராபுரம்), சதாசிவம் (பல்லடம்); பொருளாளராக திருவேங்கடம் (செங்கப்பள்ளி); பொது செயலாளர்களாக பாலசுப்ரமணியம் (பல்லடம்), சண்முகம் (குன்னத்தூர்), சிதம்பரசாமி (உடுமலை), செல்வக்குமார் (குண்டடம்), மாவட்ட செயலாளர்களாக மகாலிங்கம், சின்னாக்கவுன்டர், பழனிவேல்ராஜ், முருகேசன், செந்தில்குமார், முகமது இப்ராகிம், சதக்கத்துல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வட்டார தலைவர்களாக மணி (அவிநாசி), செல்வா பழனிசாமி (தாராபுரம்), நாராயணசாமி (குடிமங்கலம்), ரவிச்சந்திரன் (குண்டடம்), மூலனூர் (ஜோதிக்குமார்), நடராஜ் (மடத்துக்குளம்), லிங்கசாமி (பொங்கலூர்), பாலசுப்ரமணியம் (வெள்ளகோவில்), அருளானந்தம் (உடுமலை), சர்வேஸ்வரன் (ஊத்துக்குளி), ராஜேந்திரன் (திருப்பூர்), சத்தியநாதன் (காங்கயம்). மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் நியமிக்கப்பட்டனர். நகர தலைவர்களாக ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.முன்னாள் எம்.பி., குப்புசாமி, மூத்த துணை தலைவர் ராஜாமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.