சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: ராம்தாஸ் வரவேற்பு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: ராம்தாஸ் வரவேற்பு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: ராம்தாஸ் வரவேற்பு
ADDED : ஆக 20, 2011 02:05 PM
சென்னை: புதிய தலைமைச்செயலக கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று பல்துறை சிறப்பு மருத்துவமனை அமையும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பா.ம.க., தலைவர் ராம்தாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரூ. 1200 கோடியில் உருவாகியுள்ள புதிய தலைமைச்செயலக கட்டடத்தை எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று தான் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி கூறியிருந்ததை நினைவுபடுத்தியுள்ளார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றும் முடிவு, புதிய தலைமைச்செயலகம் என்னவாகும் என்ற மக்களின் பயத்தை போக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.