செலக்டிவ் அம்னீசியாவா...: சசி தரூருக்கு கம்யூ., பதிலடி
செலக்டிவ் அம்னீசியாவா...: சசி தரூருக்கு கம்யூ., பதிலடி
செலக்டிவ் அம்னீசியாவா...: சசி தரூருக்கு கம்யூ., பதிலடி
ADDED : மே 27, 2025 07:32 AM

புதுடில்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை துவக்கியது. இந்தியாவின் தாக்குதலை கண்டித்த துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. அதையடுத்து, அந்நாட்டுடன் அனைத்து வித உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது.
இதற்கிடையே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், கேரளா மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கூறும் போது, 'துருக்கி நாட்டில், 2023ல் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு கேரளா மாநில அரசு, 10 கோடி ரூபாயை கொடுத்தது. அந்த பரிவு தவறாகி போனதை இரண்டாண்டுகளுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சி அறிந்திருக்கும். ஏனெனில், கேரளாவின் வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தொகை அதிக உதவி செய்திருக்கும்' என்றார்.
இதற்கு பதிலடியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கூறும் போது, ''ஆப்பரேஷன் தோஸ்த் என்ற பெயரில், துருக்கி நாட்டுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாயை கொடுத்த போது, சசி தரூர் எங்கே சென்றிருந்தார்... அப்போது, மவுனமாக இருந்தது ஏன்... செலக்டிவ் அம்னீசியாவா,'' என கேட்டுள்ளார்.