Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

ADDED : ஆக 03, 2011 01:01 AM


Google News
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஃபோட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காவேரிப்பட்டணத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் அசோக்பாபு தலைமை வகித்தார்.

செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஓசூர் ஏ.எஸ்.பி., ரம்யபாரதி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மாநில தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலாளர் பிரசன்னா ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.புகைப்பட கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். புகைப்பட கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில பொருளாளர் மாதேஸ்வரன், முன்னாள் மாநில தலைவர் ஸ்ரீதர், மாநில அமைப்பாளர் சவுரிராகவன், மாநில துணை தலைவர் பத்மநாபன், மண்டல செயலாளர்கள் சிவக்குமார், யுவராஜ், அப்துல்ரஷீத், கண்ணன், நகர தலைவர் அன்பரசு, மகபுப்பாஷா ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us