/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை விவசாயிகள் சார்பில் புதிய கூட்டமைப்பு துவக்கம்தேயிலை விவசாயிகள் சார்பில் புதிய கூட்டமைப்பு துவக்கம்
தேயிலை விவசாயிகள் சார்பில் புதிய கூட்டமைப்பு துவக்கம்
தேயிலை விவசாயிகள் சார்பில் புதிய கூட்டமைப்பு துவக்கம்
தேயிலை விவசாயிகள் சார்பில் புதிய கூட்டமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
குன்னூர் : நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாய சங்க கூட்டமைப்பின்
குன்னூர், கோத்தகிரி பகுதியை சேர்ந்த 16 சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு
கூட்டம் டி.மணியட்டி கிராமத்தில் நடந்தது. ஊர் தலைவர் லட்சுமணன் தலைமை
வகித்தார். நஞ்சுண்டையா சிறு தேயிலை விவசாய சங்க தலைவர் பெள்ளராஜ், ஈஸ்வர்
சிறு தேயிலை விவசாய சங்க தலைவி லட்சுமி முன்னிலை வகித்தனர். சிறப்பு
விருந்தினராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சங்கரலிங்கம் பங்கேற்றார்.
குன்னூர், கோத்தகிரி சிறு தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, 'பெஸ்டா'
என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. டில்லியில் உள்ள கல்வி, தகவல் மைய கள
மேலாளர் ராஜன் மேற்பார்வையில் நடந்த நிர்வாகிகள் தேர்வில், அமைப்பின்
தலைவராக விசுவநாதன், செயலராக சிவகுமார், பொருளாளராக போஜராஜ், துணைத்
தலைவர்களாக ஹரிதாஸ், மூர்த்தி, துணை செயலராக சுமதி, செயற்குழு
உறுப்பினர்களாக போஜன், கிருஷ்ணன், கோபால், பொங்கியண்ணன், மூர்த்தி,
முருகன், லட்சுமி, நஞ்சன், போஜன் தேர்வு செய்யப்பட்டனர்.
தேயிலை வாரியம், உபாசி வேளாண் அறிவியல் நிலைய பரிந்துரைப்படி தரமான
பசுந்தேயிலையை பறிக்க வேண்டும். சிறு தேயிலை விவசாயிகள் மத்தியில் தரமான
பசுந்தேயிலையை பறிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும். புதிய சங்கங்களை ஏற்படுத்தி 'பெஸ்டா'வில் இணைக்க வேண்டும்.
கவாத்து செய்யப்படாத தேயிலை தோட்டங்களை சங்கத்தின் மூலம் தேயிலை வாரியம்,
உபாசி கே.வி.கே., உதவியுடன் கவாத்து செய்ய வேண்டும். மாநில, தேசிய சிறு
தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க
வேண்டும் என்ற கருத்துகள், சங்கத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. கூட்ட
ஏற்பாடுகளை டி.மணியட்டி ஈஸ்வர், நஞ்சுண்டையா சிறு தேயிலை விவசாயிகள்
சங்கத்தினர், ஊர் மக்கள் செய்திருந்தனர். மூர்த்தி நன்றி கூறினார்.