Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மரத்தடியில் யூனியன் கவுன்சில் கூட்டம்

மரத்தடியில் யூனியன் கவுன்சில் கூட்டம்

மரத்தடியில் யூனியன் கவுன்சில் கூட்டம்

மரத்தடியில் யூனியன் கவுன்சில் கூட்டம்

ADDED : ஆக 19, 2011 03:22 PM


Google News
ஆத்தூர்: சேலம் அருகேயுள்ள தூக்கணாம்பாளையம் யூனியன் கட்டடத்திற்கு கடந்த ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில் புதிய கட்டடம் கட்ட அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

தற்போது கட்டட பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து கட்டடத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயர்களோடு கல்வெட்டி அமைக்க வேண்டும் என யூனியன் தலைவர் , பி.டி.ஓ.,விடம் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு பி.டி.ஒ., மறுத்து விட்டார். பின்னர் போதிய கவுன்சிலர்கள் இல்லை எனவும், போதிய கோரம் இல்லை எனவும் கூறி யூனியன் கட்டடத்தை பூட்டி விட்டு சென்றார். இதனையடுத்து அங்கிருந்த கவுன்சிலர்களுடன் மரத்தடியில் யூனியன் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்டட பணிகள் தரமற்றவையாக உள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us