Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதுரை ஆட்டோ டிரைவர் கொலை : இருவர் சரண்

மதுரை ஆட்டோ டிரைவர் கொலை : இருவர் சரண்

மதுரை ஆட்டோ டிரைவர் கொலை : இருவர் சரண்

மதுரை ஆட்டோ டிரைவர் கொலை : இருவர் சரண்

ADDED : ஆக 03, 2011 01:27 AM


Google News
Latest Tamil News

ஒட்டன்சத்திரம் : மதுரை ஆட்டோ டிரைவர் கொலையில் தேடப்பட்ட, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் கூட்டாளிகள் இருவர், ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்த்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன். கடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தார். இதை எஸ்ஸார் கோபி எதிர்த்தார். இந்நிலையில், 2009 ஏப்., 16 ல், பாண்டியராஜன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மனைவி புகாரின்படி, எஸ்ஸார் கோபி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை, மதுரையை சேர்ந்த வீரபத்திரன், 36, மணிகண்டன், 45, ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் விஜயகுமார் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us