Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு

குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு

குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு

குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு

ADDED : செப் 16, 2011 12:13 AM


Google News

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டிய கதவை நெம்பி ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாச்சியார்கோவில் அருகே திருப்பந்துறை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் அருணாசலம்(45). இவர் பூம்புகார் கைவினைப்பொருள் உற்பத்தி பிரிவில் போர்மேனாக உள்ளார். இவரது மனைவி அஞ்சம்மாள்(40). திருப்பந்துறை உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்திற்கு நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு நன்னிலத்திற்கு சென்றுவிட்டனர். நேற்று திருமணம் முடிந்து மாலை 4 மணிக்கு வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல்கதவு வழியாக கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது.



வீட்டிற்குள் இருந்த மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த தங்கநகை, வெள்ளிப்பாத்திரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என அனைத்தும் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோக்களில் தங்க நெக்லஸ் 2, வளையல் 6, தோடு 5, கைசெயின் 4, மோதிரம் 5, செயின் 3, ஜிமிக்கி 4 என 30 பவுன் நகைகள், மற்றும் வெள்ளிப்பாத்திரங்கள் குத்துவிளக்கு 1, கொலுசு 3 ஜோடி, குங்குமச்சிமிழ் 2, டம்ளர் 2 என அரைகிலோ வெள்ளிப்பாத்திரங்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ஏழு லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீஸ் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us