மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
ADDED : ஜூலை 24, 2011 01:23 AM
கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே உள்ள இரண்டாம்கட்டளை மெயின்ரோட்டை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கந்தசாமி(50).
விவசாயி. இவர் சம்பாதிக்கும் பணத்தை குடித்து வீண் செலவு செய்து வந்துள்ளார். இதனால் இவரது மனைவி சித்ரா கந்தசாமியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த 22ம் தேதி மனைவி மீது கோபித்துக்கொண்டு மதுவில் எண்டோசல்பான் பூச்சிமருந்தை கலந்து குடித்துவிட்டார். கந்தசாமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். கந்தசாமி அண்ணன் சண்முகம் நாச்சியார்கோவில் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீஸார் விசாரிக்கின்றனர்.