/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் தொழில் துறையினர் முதல்வரை சந்திக்க முகாம்திருப்பூர் தொழில் துறையினர் முதல்வரை சந்திக்க முகாம்
திருப்பூர் தொழில் துறையினர் முதல்வரை சந்திக்க முகாம்
திருப்பூர் தொழில் துறையினர் முதல்வரை சந்திக்க முகாம்
திருப்பூர் தொழில் துறையினர் முதல்வரை சந்திக்க முகாம்
ADDED : ஜூலை 27, 2011 02:39 AM
திருப்பூர் : சாயப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில், முதல்வரை சந்திக்க, தொழிற்துறையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
திருப்பூர் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு, இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இறுதியாக, கோர்ட் உத்தரவுப் படி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற் நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான கடிதத்தையும், சாய ஆலைகள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அளித்துள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய 'எவாப்ரேட்டர்' பகுதிக்கு மாற்றான தீர்வுகளை அமலாக்குவதில், அதிக தீவிரம் காட்டப்பட்டது.நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டும்,'பிரெய்ன் சொலியூஷன்' தொழிற்நுட்பத்தை சோதனை முறையில் இயக்க, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாதகமான பிற தொழிற்நுட்பங்களையும் பிற சுத்திகரிப்பு நிலையங்களில், சோதனை முறையில் இயக்க அனுமதிக்க வேண்டுமென, தொழிற்துறையினர், முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தை இயக்க கடிதம் கொடுத்து நீண்ட நாட்களாகியும், சாதகமான அறிவிப்பு வெளிவராததால், சாய ஆலை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ''ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தை செயல்படுத்தி, சுத்திகரிப்பு பணியை மேற்கொள்வதற்காக அனுமதி பெற்றுத்தர வேண்டும்; அல்லது நிபந்தனையுடனாவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். கடந்த சில நாட்களாக, அதிகாரிகள் குழுவினர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். முதல்வரிடமும் விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், பாதிப்புகளை முதல்வரிடம் நேரில் விளக்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்காக, தொழில்துறையினர், கடந்த இரு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர்' என்றனர்.