ADDED : செப் 02, 2011 11:05 PM
வால்பாறை : கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா நேற்று துவங்கியது.
வால்பாறை கருமலை எஸ்டேட். இங்குள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்திருவிழா நேற்று உபவாச தியானத்துடன் துவங்கியது. ஊட்டி வெலிங்டன் ஆலய பங்குதந்தை பிரான்சிஸ்சேவியர் துவக்கி வைத்தார். நாளை (4ம் தேதி) காலை மாறை மாவட்ட பொருளாளர் கனகராஜ் திருவிழா கொடியேற்றி விழாவை துவக்கி வைக்கிறார். வரும் 8ம் தேதி 'தேவத்தாயின் பிறந்த நாளையொட்டி' சிறப்பு திருப்பியும், தேர்பவனியும் நடக்கிறது. வரும் 10ம் தேதி கோவை ஆயர் தாமஸ் அங்குவிலாஸ் தலைமையில் திருவிழா திருப்பி, காணிக்கை பவனியும், இரவு 8.00 மணிக்கு 'ஆடம்பர தேர்பவனியும்' நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தைகள் ஜெரோம், சேவியர்பயஸ் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.