/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் அளிப்போம்: மா.கம்யூ.,நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் அளிப்போம்: மா.கம்யூ.,
நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் அளிப்போம்: மா.கம்யூ.,
நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் அளிப்போம்: மா.கம்யூ.,
நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் அளிப்போம்: மா.கம்யூ.,
ADDED : செப் 17, 2011 01:02 AM
திருக்கோவிலூர் : நில அபகரிப்பு புகார்கள் மீது அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதே புகார் அளிக்கப்படுமென மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேசினார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த எரவலம், கீழத்தாழனூர் பகுதிகளில் நடந்துள்ள நில மோசடி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மா.
கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த வெண்மார், எரவலம், கச்சிக்குப்பம், கீழத்தாழனூர், வேங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை வாங்கி தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்ற தொழிலதிபர் முகில்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் வேல்மாறன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூவராகவன், தாண்டவராயன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது :திருக்கோவிலூர் பகுதியில் சர்க்கரை ஆலை உருவாக்குவதற்கு முன்பாக அதனை அறிந்து கொண்ட அரசியல் குடும்பம் நில அபகரிப்பை செய்துள்ளது. இந்த கொடுமையை தடுத்து நிறுத்தவில்லை என்றால், பக்கத்து கிராம மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை உங்களுக்கு ஏற்படாதா? அரசியலுக்கு வருவது மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான். மக்களுக்கு கொடுமை செய்வதற்காக அல்ல. நிலத்தை பறிகொடுத்த மக்கள் புகார் அளித்து 22 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த மாவட்டத்தில் நில மோசடி சம்மந்தமாக 58 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும் கலெக்டர், எஸ்.பி.,- டி.ஆர்.ஓ., மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை. மற்ற மாவட்டங்களில் எல்லாம் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த அதிகாரிகள் மீதே புகார் அளிக்கப்படும்.இவ்வாறு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.