வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு
வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு
வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு
தேனி : வாழை சாகுபடி பாதிப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சேர விவசாயிகள் ஏக்கருக்கு 39 ஆயிரத்து 245 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். வங்கி கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகளுக்கு அரசு 55 சதவீதம் மானியம் வழங்குகிறது. மானியம் போக விவசாயிகள் ஏக்கருக்கு 19 ஆயிரத்து 603 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு பிரிமியம் தொகையில் 55 சதவீதம் மானியம் வழங்குகிறது. இவர்கள் 17 ஆயிரத்து 642 ரூபாய் பிரிமியம் செலுத்தினால் போதும்.
குறைப்பு: வெங்காயத்திற்கு அரசு இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு 95 ஆயிரத்து 684 ரூபாயில் இருந்து 84 ஆயிரத்து 684 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் தொகையில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம், கடன் பெறாத விவசாயிகளுக்கு 55 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.


