வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை
வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை
வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை
UPDATED : அக் 08, 2011 06:44 PM
ADDED : அக் 08, 2011 06:20 PM
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 12வது வார்டுகளில் <உள்ள வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பித்தளை தட்டு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் நகராட்சி துணை சேர்மன் தி.மு.க., வை சேர்ந்த சாரட் ரவி, தற்போது 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர், இந்த வார்டில் <உள்ள மக்களுக்கு வீடு, வீடாக பித்தளை பூக்கோல தட்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தாலி கயிறு <உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து, ஆத்தூர் தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணனிற்கு புகார் வந்ததையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக அந்த வார்டில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். சேலம் கலெக்டர் மகரபூஷனத்தின் உத்தரவின் பேரில், பித்தளை தட்டு உள்ளிட்ட பொருட்கள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க.வேட்பாளர் சாரட் ரவியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சாரட் ரவி தலைமறைவாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


