ADDED : அக் 08, 2011 03:05 PM
லக்னோ : லக்னோவின் சின்கட் பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரியின் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீப்ஷிகா கண்ணவ்ஜியா (20) என்னும் மாணவர் 4ம் ஆண்டு பி.டி.எஸ்., படித்து வருகிறார். இவர் இன்று கல்லூரியின் 3வத மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


