/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காஸ் ஏஜென்சிகளை கண்காணிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்காஸ் ஏஜென்சிகளை கண்காணிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
காஸ் ஏஜென்சிகளை கண்காணிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
காஸ் ஏஜென்சிகளை கண்காணிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
காஸ் ஏஜென்சிகளை கண்காணிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2011 12:53 AM
புதுச்சேரி : மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழக பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன் வரவேற்றார். தலைவர் நாகசுப்ரமணியா தலைமை தாங்கினார். அமைப்பாளர் குப்புசாமி, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் மகளிரணி பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு பொதுச் செயலாளர் முருகானந்தம், கடந்த ஆண்டின் வரவு செலவுக் கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில், பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சிகள் விதிமுறைகளைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட வேண்டும். ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். எடையளவு இயந்திரங்கள் முறையாக இயக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


