/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்
கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்
கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்
கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்
ADDED : அக் 03, 2011 03:48 AM
பந்தலூர் : பந்தலூர் அருகே கிளன்ராக் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் பகுதியிலிருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் கிளன்ராக் அமைந்துள்ளது.
இப்பகுதியில் காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 10 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அவ்வப்போது சுகாதார துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், சிகிச்சையளித்தும் வருகின்றனர். கடந்த 30ம் தேதி கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன், கிராம சுகாதார செவிலியர்கள் பரமேஸ்வரி, சைலஸ்டி ஆகியோர் கொண்ட மருத்துவகுழுவினர் நேரில் சென்று சிகிச்சையளித்தனர். 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவ மருந்து வழங்கப்பட்டன. வளர் இளம்பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த சோகை மாத்திரைகள் வழங்கப்பட்டன.
எனினும், பழங்குடியின பெண்கள் மத்தியில் சுகாதாரம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதை தவிர, இப்பகுதிக்கான வாகன சேவைக்கும் வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.


