/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/கருவூல கணக்குத்துறை சங்கம் பொன்விழா மாநில செயற்குழுகருவூல கணக்குத்துறை சங்கம் பொன்விழா மாநில செயற்குழு
கருவூல கணக்குத்துறை சங்கம் பொன்விழா மாநில செயற்குழு
கருவூல கணக்குத்துறை சங்கம் பொன்விழா மாநில செயற்குழு
கருவூல கணக்குத்துறை சங்கம் பொன்விழா மாநில செயற்குழு
ADDED : அக் 03, 2011 03:07 AM
திருவாரூர்: தமிழ்நாடு கரூவூல கணக்குத்துறை சங்கத்தின் பொன்விழா செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது.
தமிழ்நாடு கரூவூல கணக்குத்துறை சங்கத்தின் 50வது ஆண்டையொட்டி, பொன்விழா மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது.
மாநிலத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சிலுப்பன், பொருளாளர் இளமாறன், திருவாரூர் மாவட்டத்தலைவர் வேலாயுதம், செயலாளர் அருணாச்சலம், இணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், சுரேஷ்குமார், சித்திரகலா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் மாநிலத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 20 தாலுகாக்களில் சார்நிலை கருவூலம் புதிதாக ஏற்படுத்த வேண்டும். இடிந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் அலுவலகங்களுக்கு, சொந்த கட்டிடம் கட்டித் தரவேண்டும்.
கருவூல கணக்குத்துறையில் உள்ள 1,500 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர் முதல் கூடுதல் இயக்குனர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும். 2005ம் ஆண்டுக்கு பிறகு அலுவலகத்துக்கு தேவையான கம்ப்யூட்டர்கள் வழங்கப்படாததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் புதிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதத்தில் அஞ்சல் அட்டை அனுப்புவது, ஃபேக்ஸ் அனுப்புவது என்றும், மூன்றாவது கட்டமாக, நவம்பர் மாதத்தில் மாவட்ட தலைநகரங்களில் கவனஈர்ப்பு நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, முன்னாள் மாநிலத்தலைவர் அமாவாசை மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


