வான்வெளி வழிகாட்டிச் சேவை குறித்த கருத்தரங்கம்
வான்வெளி வழிகாட்டிச் சேவை குறித்த கருத்தரங்கம்
வான்வெளி வழிகாட்டிச் சேவை குறித்த கருத்தரங்கம்
ADDED : அக் 02, 2011 04:55 AM
சென்னை:தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வான்வெளி வழிகாட்டிச் சேவை, பழமையான முறையில் இருந்து விமான போக்குவரத்தை விடுவித்துள்ளது.
இதன் மூலம், விமான பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு, விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு மிச்சம் ஆகிய பலன்கள் கிடைத்துள்ளன என்று, மத்திய வான்வெளி வழிகாட்டிச் சேவை அமைப்பின் உறுப்பினர் சோமசுந்தரம் கூறினார்.சென்னையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை குறித்த, ஒருங்கிணைந்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நடந்த இக்கருத்தரங்கை துவக்கி வைத்து, மத்திய வான்வெளி வழிகாட்டிச் சேவை அமைப்பின் (ஏர் நேவிகேசன் சர்வீசஸ்) உறுப்பினர் சோமசுந்தரம் பேசும்போது, 'சென்னையை மையமாக வைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பழமையான தொழில்நுட்பம் விடுவிக்கப்பட்டுள்ளது.புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பும், விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு மிச்சமும் பயனாக கிடைத்துள்ளது,' என்றார்.இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், வான்வெளி மேல் மண்டலத்திற்கான விமான போக்குவரத்து, ராடார்கள் ஒருங்கிணைப்பு, ஏர் டிராபிக் புளோ மேனேஜ்மென்ட், தானியங்கி தகவல் பரிமாற்ற திட்டம், நெறிமுறையுடன் கூடிய வழிகாட்டுதல், தரைவழி உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.


