/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பஞ்.,தலைவர்கள் பதவிக்கு கட்சியினர் குதிரை பேரம் : நான்குநேரி யூனியனில் பரபரப்புபஞ்.,தலைவர்கள் பதவிக்கு கட்சியினர் குதிரை பேரம் : நான்குநேரி யூனியனில் பரபரப்பு
பஞ்.,தலைவர்கள் பதவிக்கு கட்சியினர் குதிரை பேரம் : நான்குநேரி யூனியனில் பரபரப்பு
பஞ்.,தலைவர்கள் பதவிக்கு கட்சியினர் குதிரை பேரம் : நான்குநேரி யூனியனில் பரபரப்பு
பஞ்.,தலைவர்கள் பதவிக்கு கட்சியினர் குதிரை பேரம் : நான்குநேரி யூனியனில் பரபரப்பு
நான்குநேரி : நான்குநேரி யூனியனில் உள்ள கிராம பஞ்.,தலைவர்கள் பதவிக்கு அரசியல் கட்சியினர் குதிரை பேரம் நடத்தி வருவதால் பஞ்.,தலைவருக்கு போட்டியிடும் பலர் கலக்கமடைந்துள்ளனர்.
நான்குநேரி யூனியனை பொறுத்தவரை மாவட்ட கவுன்சிலர், 16 யூனியன் கவுன்சிலர்கள், 27 கிராம பஞ்.,தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில் எல்லா இடங்களுக்கும் போட்டியிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயேட்சைகள் பலர் களமிறங்கியுள்ளனர். எனவே இப்பதவிக்கு போட்டியின்றி யாரும் தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இருந்தபோதிலும் பல அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி வேட்பாளரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க குதிரை பேரத்தில் இறங்கியுள்ளனர். எப்படியும் தேர்தலுக்காக பல லட்சங்களை வேட்பாளர்கள் காலி பண்ண வேண்டிய நிலையில் தேர்தல் கமிஷன் சொல்லும் வேட்பாளர்கள் செலவு தொகை ஒரு நாள் செலவுக்கு தான். எனவே பல லகரங்களை காலி பண்ணினாலும் வெற்றி பெற முடியாவிட்டால் என்ன செய்வது. எனவே அந்த பணத்தை எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொடுத்துவிட்டு வாபஸ் வாங்க பல அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
வேட்பாளர்களும் பணத்தை செலவழித்து, நிம்மதியில்லாமல் டென்சனோடு அலையாமல் ஹாயாக உட்கார்ந்து கொண்டே வெற்றிக் கனியை பறிக்கலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டனர். நான்குநேரி யூனியனில் முக்கிய பிரமுகர்கள் அதாவது சேர்மன் பதவியை கனவில் கொண்டுள்ள அதிமுக வேட்பாளர்களும், காங்., வேட்பாளர்களும் இதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.
இதேபோல் கிராம பஞ்.,தலைவர் பதவியை பிடிக்கவும் குதிரை பேரம் ஆரம்பித்துள்ளது. கிராம பஞ்.,தலைவர் பதவிக்கு அரசியல் கட்சி சின்னம் கிடையாது. அனைத்துமே சுயேட்சை சின்னம். கிராம பஞ்.,தலைவர் பதவியை பொறுத்தவரை தலைவருக்கு 'செக்பவர்' அதிகாரம் உள்ளது. இதனால் இப்பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் பஞ்.,தலைவர் பதவியை 'அன்னபோஸ்டாக' மாற்ற முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
நான்குநேரி யூனியனில் மனோன்மணீஸ்வரர் கோயில் அமைந்துள்ள பஞ்., மற்றும் அருகிலுள்ள பஞ்., யூனியனில் பார்டரில் உள்ள பஞ்., பகுதியில் இதற்கான பேரம் துவங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி, முக்கிய பிரமுகர்களின் இந்த நடவடிக்கையால் பல சுயேட்சை வேட்பாளர்கள் கலக்கத்தில் என்ன நடக்குமோ என புரியாமல் கதி கலங்கியுள்ளனர்.


