கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
ADDED : செப் 28, 2011 09:19 AM
கரூர்: கரூர் மார்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரூரில் செயல்பட்டு வரும் பூ மார்கெட்டுக்கு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பூக்கள் அதிகளவில் வருகின்றன. இந்நிலையில், மழை குறைவு மற்றும் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. நவராத்திரி துவங்கியதும் பூக்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ரூ. 40க்கு விற்று வந்த மல்லிகை 6 மடங்கு உயர்ந்து இன்று ரூ. 240 ஆக விற்று வருகிறது. இதே போல் முல்லைப்பூ ரூ. 200 ஆகவும், கனகாம்பரம் ரூ. 100, சம்பங்கி ரூ. 40 என பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.