Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி நகராட்சி தேர்தல் 59 பேர் வேட்பு மனு தாக்கல்

தென்காசி நகராட்சி தேர்தல் 59 பேர் வேட்பு மனு தாக்கல்

தென்காசி நகராட்சி தேர்தல் 59 பேர் வேட்பு மனு தாக்கல்

தென்காசி நகராட்சி தேர்தல் 59 பேர் வேட்பு மனு தாக்கல்

ADDED : செப் 28, 2011 12:43 AM


Google News

தென்காசி : தென்காசி நகராட்சி தேர்தலில் நேற்று 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென்காசி நகராட்சி தலைவர் பதவிக்கு நேற்று சீதாலட்சுமி, ரேவதி, செல்வி தேர்தல் நடத்தும் அலுவலர் செழியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டுக்கு சாகுல்கமீது, குமார், கஜேந்திரன், ராமராஜ், 2வது வார்டுக்கு சித்ரா, அகிலாண்டேஷ்வரி, விஜயலட்சுமி, 3வது வார்டுக்கு பாண்டி, சிங்காரவேலன், 4வது வார்டுக்கு விஜயமணி, 6வது வார்டுக்கு வரதராஜா, முத்துசாமி, 7வது வார்டுக்கு திருநாவுக்கரசு, சொர்ணம், மணிகண்டன், கோபால்ராம், 8வது வார்டுக்கு மந்திரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



9வது வார்டுக்கு அப்துல்ரசாக், 10வது வார்டுக்கு இசக்கியம்மாள், 12வது வார்டுக்கு அரசம்மாள், பேச்சிமுத்து, 13வது வார்டுக்கு கமால் சேக்தாவூது, முகம்மது முஸ்தபா, 14வது வார்டுக்கு செண்பககுமாரசாமி, 15வது வார்டுக்கு பாலசுப்பிரமணியன், கார்த்திக், ராமதாஸ், முகம்மது அன்சாரி, 16வது வார்டுக்கு முகம்மது மைதீன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்தாமதாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



19வது வார்டுக்கு நாகூர்மீரான், 20வது வார்டுக்கு காமராஜ், 22வது வார்டுக்கு ராமச்சந்திரன், ராமசுப்பிரமணியன், பாபுராஜ், 23வது வார்டக்கு வேலம்மாள், கோமாலட்சுமி, 24வது வார்டுக்கு சேக் பரீத் முகைதீன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்துவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 26வது வார்டுக்கு பார்த்தசாரதி, 27வது வார்டுக்கு சங்கீதா, 28வது வார்டுக்கு மாரியம்மாள், முருகன், ராஜாசிங், திருமலைநம்பி ராஜன், வேலு, 30வது வார்டுக்கு முபாரக் அலி, அபுபக்கர், 31வது வார்டுக்கு காந்திமதி, உமா, 32வது வார்டுக்கு கருப்பசாமி, செல்லப்பா, உச்சிமாகாளி, 33வது வார்டுக்கு பத்மா உதவி தேர்தல் அலுவலர் பழனிகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us