கரூர் நகராட்சி விதிமீறல்: அ.தி.மு.க.மீது பா.ம.க புகார்
கரூர் நகராட்சி விதிமீறல்: அ.தி.மு.க.மீது பா.ம.க புகார்
கரூர் நகராட்சி விதிமீறல்: அ.தி.மு.க.மீது பா.ம.க புகார்
UPDATED : செப் 27, 2011 02:33 PM
ADDED : செப் 27, 2011 02:13 PM
கரூர்:கரூர் நகராட்சி தலைவர் பதவிக்காக பா.ம.க.
சார்பில் வேட்பு மனு தாக்கல் நடந்தது. அப்போது பா.ம.க.வினர் அ.தி.மு.க.விதி மீறல் குறித்து புகார் கூறினர். கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு டானியா பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பா.ம. க. துணைபொதுச்செயலர் பாஸ்கரன் உடன் சென்றார். பின்னர் அவர் கூறுகையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க.வினர் விதிமுறை மீறினர். அது மட்டுமின்றி , தேர்தல் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்புகள் முன்கூட்டியே அ.தி.மு.க. வினருக்கு வழங்கப்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.