ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கில் சாட்சியம் அளித்த பெண்கள் திடீர் பல்டி
ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கில் சாட்சியம் அளித்த பெண்கள் திடீர் பல்டி
ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கில் சாட்சியம் அளித்த பெண்கள் திடீர் பல்டி

கொச்சி : ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில், விபசாரம் செய்ததாகவும், பெண்களை விற்பனை செய்ததாகவும் நடந்துவரும் வழக்கில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் தனியார் ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில், விபசாரம் மற்றும் பெண்களை விற்பனை செய்வதாக, 1990ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து, மாநில தனிப்படை போலீசார், விசாரணை நடத்தினர். ஆனால், புகாருக்கான போதுமான ஆதாரங்கள், சாட்சிகள் கிடைக்காமல் போலீசார் திணறினர். இவ்வழக்கில், 21 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, முன்னாள் முதல்வரும், தற்போது, சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு, விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில், ஐகோர்ட் உத்தரவின்படி, போலீசாரின் டைரி, சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை ஆகியவை, ஐகோர்ட்டில் போலீசார் அளித்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ரோசலின் மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோர்ட்டுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: 'இவ்வழக்கு குறித்து, உண்மை நிலவரத்தை போலீசாரிடம் சொல்லக் கூடாது. அவ்வாறு சொன்னால், ஆபத்து ஏற்படும். சொல்லாமல் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் தருவோம்' என, வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தற்போதைய மாநில தொழில் துறை அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டியும், அவரது உதவியாளரும், 2005ம் ஆண்டு சாலப்புறம் என்ற இடத்தில் உள்ள வீட்டில் வைத்து மிரட்டினர்.
இதுதொடர்பாக, இரு இடங்களில் எங்களை அழைத்து மிரட்டினர். அவர்கள் கூறியபடி, அப்போது ரகூப் என்பவர், எங்களிடம் சிறிது பணத்தை கொடுத்தார். பின், எங்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பும், உடனடியாக வாங்கித் தந்தனர்' என்று குறிப்பிட்டுள்ளனர். இது, இவ்வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.