/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முகையூர் தேர்தல் பணி அதிகாரி நேரில் ஆய்வுமுகையூர் தேர்தல் பணி அதிகாரி நேரில் ஆய்வு
முகையூர் தேர்தல் பணி அதிகாரி நேரில் ஆய்வு
முகையூர் தேர்தல் பணி அதிகாரி நேரில் ஆய்வு
முகையூர் தேர்தல் பணி அதிகாரி நேரில் ஆய்வு
ADDED : செப் 26, 2011 10:45 PM
திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றிய தேர்தல் அதிகாரி முத்துமீனாள் ஓட்டு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
முகையூரில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் அதிகாரியான மாவட்ட திட்ட இயக்குனர் முத்து மீனாள் தலைமை தாங்கினார். இதில், முகையூர் ஒன்றியத்தில் பதிவாகும் ஓட்டு எண்ணும் இடமாக அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. ஓட்டு எண்ணுவதற்கான அறைகளின் ஒதுக்கீடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முத்துமீனாள் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, பி.டி.ஓ., முகமது ஷாஜகான், ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் இளங்குமரன் உடனிருந்தனர்.