ADDED : செப் 25, 2011 11:58 PM
புதுச்சேரி:புதுச்சேரி சத்ய சாய் சதுரங்க கழகம் சார்பில் 'புதுச்சேரி
கிங்ஸ்' செஸ் போட்டி முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண மண்டபத்தில் நடந்தது.
இரண்டு நாள் நடந்த போட்டிகளுக்கு சிவக்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி
போட்டோ ஸ்டுடியோ சங்கத் தலைவர் பாபு போட்டிகளைத் துவக்கி வைத்தார். அரசு
நடராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறுவர் முதல்
பெரியவர் வரை பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை புதுச்சேரி சத்ய சாய் சதுரங்க கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.