Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பண்டிகையை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்:சரிவில் இருந்து மீண்டது கொப்பரை மார்க்கெட்

பண்டிகையை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்:சரிவில் இருந்து மீண்டது கொப்பரை மார்க்கெட்

பண்டிகையை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்:சரிவில் இருந்து மீண்டது கொப்பரை மார்க்கெட்

பண்டிகையை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்:சரிவில் இருந்து மீண்டது கொப்பரை மார்க்கெட்

ADDED : செப் 25, 2011 01:17 AM


Google News

பொள்ளாச்சி :கொப்பரை மார்க்கெட் திடீர் சரிவில் இருந்து மீண்டுள்ள நிலையில், விவசாயிகளும், கொப்பரை உற்பத்தியாளர்களும் பண்டிகை சீசனை எதிர்நோக்கியுள்ளனர்.காங்கேயம் மார்க்கெட்டில், கடந்த 17ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 56 - 57 ரூபாய் கிடைத்தது.

தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,235, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 87 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு, 16 ஆயிரத்து 500 முதல் 17 ஆயிரத்து 500 வரையும், உணவுத் தேவைக்காக அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு, 16 ஆயிரம், விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய்க்கு 10, மரத்தில் இருந்து வியாபாரிகள் பொறுப்பில் பறித்துக் கொள்ள தேங்காய்க்கு 8.50 - 9.25 வரை கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 57, தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,245, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 87 ரூபாய் கிடைத்தது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு, 16 ஆயிரத்து 500 முதல் 17 ஆயிரத்து 200 வரை நிர்ணயிக்கப்பட்டது. பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் உணவுத் தேவைக்கான இளந்தேங்காய் டன்னுக்கு, 15 ஆயிரத்து 500 ரூபாய் கிடைத்தது.விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய்க்கு 10.25, வியாபாரிகள் சொந்த பொறுப்பில் பறித்துக் கொள்ள தேங்காய்க்கு 8.50 வழங்கப்பட்டது. கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த 20ம் தேதியில் இருந்து கொப்பரை மார்க்கெட் சரியத் துவங்கியது. கொப்பரைக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு 53, தேங்காய் எண்ணெய் டின்னுக்கு 1,215 ரூபாய் கிடைத்தது. விலை உயரும் என, விவசாயிகளும், கொப்பரை உற்பத்தியாளர்களும் காத்திருந்த நிலையில், விலை சரிவு ஏற்பட்டு, மார்க்கெட் ஸ்தம்பித்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்து, கடந்த வார நிலைக்கு வந்துள்ளது. நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி சீசன் துவங்கி விட்டதால், கொப்பரை விலையில் சரிவு இருக்காது' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us