/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பண்பாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி சாதனைபண்பாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி சாதனை
பண்பாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி சாதனை
பண்பாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி சாதனை
பண்பாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி சாதனை
ADDED : செப் 25, 2011 12:46 AM
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் பள்ளிகளுக்கிடையே நடந்த பண்பாட்டு போட்டிகளில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்ட நிர்வாகம் கிராமப்புற மாணவர்களிடையே நற்பண்புகள், தேசபக்தி, தெய்வபக்தி, பரோபகாரம், தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை போன்ற நற்குணங்களை வளர்க்கும் விதமாக யூனியன் அளவில் பள்ளிகளுக்கிடையே 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, நினைவாற்றல் போட்டிகள் நடந்தது.
சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிருபாகரன், ஸ்ரீராமமூர்த்தி ஓவியப் போட்டியில் முதல் பரிசையும், விக்னேஷ் இரண்டாம் பரிசையும், முத்துபொன்பிரசாத் பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்கள் பிரேமா, லீமா ஹோலிகிராஸ்மேரி, சித்திரைசெல்வன், ஹெம்மாமேரி ஆகியோரை பள்ளி நிர்வாகி எட்வர்ட் அடிகளார், தலைமையாசிரியர் தேவராஜ் ஆகியோர் பாராட்டினர்.