/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/டியூட்டி டிராபேக்' சலுகை குறைப்பு பனியன் தொழில் துறையினர் கவலைடியூட்டி டிராபேக்' சலுகை குறைப்பு பனியன் தொழில் துறையினர் கவலை
டியூட்டி டிராபேக்' சலுகை குறைப்பு பனியன் தொழில் துறையினர் கவலை
டியூட்டி டிராபேக்' சலுகை குறைப்பு பனியன் தொழில் துறையினர் கவலை
டியூட்டி டிராபேக்' சலுகை குறைப்பு பனியன் தொழில் துறையினர் கவலை
ADDED : செப் 23, 2011 10:00 PM
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கான 'டியூட்டி
டிராபேக்' சலுகையான 7.5 சதவீதத்தில், 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இது, பனியன் தொழில் துறையினரை வருத்தமடையச் செய்துள்ளது. ஏற்றுமதி
வர்த்தகத்தின்போது, அந்நாட்டில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி
செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கேற்ப,
'டியூட்டி டிராபேக்' சலுகை அளிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர், உற்பத்தி
பொருட்களை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்கும் போது, மொத்த வர்த்தக
மதிப்பீட்டில் குறிப்பிட்ட சதவீதம் திரும்ப வழங்கப்படுகிறது. பஞ்சு, நூல்
விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, சாயக்கூலி உயர்வு, போக்குவரத்து கட்டண
உயர்வு என திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் உற்பத்தி செலவு கடுமையாக
அதிகரித்திருந்தது. சர்வதேச சந்தைகளில, பல்வேறு நாடுகளின் போட்டிகளை
சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், உடனடியாக உற்பத்தி கட்டணத்தை
உயர்த்த முடியவில்லை. உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாத நிலை
ஏற்பட்டதால், உற்பத்தி அளவை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக நிலவரப்படி, பின்னலாடை
ஏற்றுமதியாளர்களுக்கு, 'டியூட்டி டிராபேக்' மூலமாக திரும்ப கிடைக்கும் தொகை
மட்டும் கையில் மிஞ்சுகிறது. பின்னலாடை வர்த்தகம் சீராக வளர்ச்சி
பெற்றிருந்தபோது, 11 சதவீதம் வரை 'டியூட்டி டிராபேக்' வழங்கப்பட்டது. பின்,
8.8 சதவீதம் எனவும், அதன்பின், 7.5 சதவீதம் எனவும் படிப்படியாக குறைந்தது.
மின்வெட்டு, நூல் விலை என தொழிலுக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்ட போதிலும்,
'டியூட்டி டிராபேக்' சலுகை உயர்த்தப்படவில்லை; மாறாக, மீண்டும்
குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகை யில்,'மத்திய நிதி
அமைச்சகம், ஒவ்வொரு பட்ஜெட்டுக்கு பிறகும், கடந்த கால, நிகழ்கால தொழில்
நடைமுறைகளை ஆராய்ந்து, 'டியூட்டி டிராபேக்'கை வழங்கும். தொழில்
பாதிக்கப்பட்டிருந்ததால், மீண்டும் சலுகைகள் குறைக்கப்படாது என
உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், இது வரை வழங்கிய 7.5
சதவீத 'டியூட்டி டிராபேக்'கை, 7.1 சதவீதமாக குறைத்துள்ளனர். சலுகை
குறைப்பு, வரும் அக்., 1 முதல் அமலாகும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதனால்,
ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த சலுகைகள் குறையும்,' என்றனர்.