/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜைராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
ADDED : செப் 23, 2011 09:53 PM
பொங்கலூர் : கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவிலில், இன்று புரட்டாசி
சனிக்கிழமை வழிபாடு நடக்கிறது.
கோவில்பாளையத்தில் புகழ்பெற்ற ராமசாமி
கோவில் உள்ளது. இங்கு ஒவ்வோரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு
வழிபாடு நடக்கிறது. ராமர் இலங்கைக்குச் செல்லும்போது, தற்போது கோவில்
அமைந்துள்ள இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் சென்றதாக ஐதீகம்.
திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள், ராமசாமி கோவிலுக்கு சென்றால், திருப்பதி
பெருமாளை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று கருதுவதால், ஒவ்வொரு ஆண்டும்
புரட்டாசி சனிக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். இந்தாண்டு
புரட்டாசி முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கணபதி ஹோமம், சுதர்சன
ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இன்று, மாதத்தின் முதல் சனிக்கிழமை
என்பதால், எண்ணற்ற பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவிலுக்கு செல்லும்
வழியில் மரக்கம்புகளால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது கோவிலுக்கு வரும்
பக்தர்களின் வசதிக்காக, திருப்பூர், பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில்
இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அவினாசிபாளையம் போலீசார்,
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த
'பார்க்கிங்' வசதியும் செய்யப்பட்டுள்ளது.