/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்ட ஈடுவிபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்ட ஈடு
விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்ட ஈடு
விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்ட ஈடு
விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்ட ஈடு
ADDED : செப் 21, 2011 01:05 AM
சேலம்: சேலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பஸ் மோதி இறந்த
அதிகாரியின் குடும்பத்துக்கு, 31 லட்சத்து 7 ஆயிரத்து 400 ரூபாய் நஷ்டஈடு
வழங்க, முதலாவது விரைவு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்,
சின்னதிருப்பதியை சேர்ந்தவர் இம்தியாஸ்(35). இவரது மனைவி சபானா.
இவர்களுக்கு சமீர், ஷெரீஃப் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பனமரத்துப்பட்டி மின்சார அலுவலகத்தில், கமர்சியல் இன்ஸ்பெக்டராக இம்தியாஸ்
பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மோட்டார்
சைக்கிளில் மேச்சேரிக்கு சென்றார். மாலை 6.45 மணிக்கு, ஓமலூர் ஃபாத்திமா
பள்ளி அருகே சென்ற போது, 'பார்வதி' என்ற தனியார் பஸ் இம்தியாஸ் சென்ற
மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார். 108 இலவச
ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்,
அவர் இறந்தார். விபத்தில் பலியான இம்தியாஸ் குடும்பத்தினர் நஷ்டஈடு
கேட்டு, வக்கீல் நாசர் பாஷா மூலம், சேலம் முதலாவது விரைவு நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சந்திரசேகரன்
முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், 'இம்தியாஸ்
குடும்பத்தினருக்கு, 31 லட்சத்து 7 ஆயிரத்து 400 ரூபாய் நஷ்டஈடு வழங்க
வேண்டும்' என உத்தரவிட்டார்.