/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்
தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்
தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்
தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்
ADDED : செப் 21, 2011 12:34 AM
நாகர்கோவில்: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பினால்
அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க மாநில தலைவர் நாகர்கோவிலில் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள
காலி பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. கடந்த முறை
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது பணி நியமன தடை சட்டத்தை கொண்டு வந்தது.
இதனால் காலி பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதை எதிர்த்து
ஊழியர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதன் பலனாக அதே அ.தி.மு.க.
அரசு 2006ம் ஆண்டில் வேலைநியமன தடை சட்டத்தை ரத்து செய்து அரசாணை
வெளியிட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த தடை சட்டத்தை தி.மு.க. அரசு
நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பணி நியமன தடை சட்டம் தொடர்ந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் வருவாய்துறை, வளர்ச்சி துறை, வணிகவரித்துறை,
பொதுப்பணித்துறை என பல்வேறு துறைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான காலி
பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப
வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய தேர்வு நடந்தது.
6640 பணியிடங்களுக்காக 5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த குறைந்த
எண்ணிக்கை உடைய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள்
என்பதை இந்த அரசு உணர வேண்டும். காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் வேலை
செய்யும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு, அரசுக்கு வருவாய்
இழப்பும் ஏற்படுகிறது. அ.தி.மு.க. அரசு வெளியிட்ட அரசாணை என்பதால் தி.மு.க.
அரசு நடைமுறைப்படுத்தவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு
தி.மு.க. செய்ததையே தொடர்ந்து செய்து வருகிறது. பணிநியமன தடை சட்டம் ரத்து
செய்து வெளியிடப்பட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் 3
லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக அந்த அரசாணையை
நடைமுறைப்படுத்த வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்பி சட்டரீதியான அங்கீகாரம்
அளித்தால் வணிக வரித்துறை, உள்ளாட்சி துறை, நகராட்சிகள் மூலம் வரியாக 1
லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இதன்மூலம் தமிழக அரசுக்கு
டாஸ்மாக் வருவாயை எதிர்பார்க்க வேண்டிய தேவை இருக்காது.
தமிழகத்தில் புதிய பென்சன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தால் பல
ஆண்டுகள் அரசு பணி செய்து வரும் அமைச்சுப்பணியாளர்கள், தொழில்நுட்ப
ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பின் பென்ஷன் பெற முடியாத நிலை உள்ளது. மேலும்
அவர்களுக்கு சம்பளம் தவிர வேறு எந்த பலனும் பெற முடியாது. இதே நிலை
நீடித்தால் வரும் 2038ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 50
ஆயிரம் கோடி ரூபாய் அரசு பணம் தனியார் வசம் சென்றிருக்கும் என
கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை அரசு
உடனடியாக செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் பணி நியமனம் என கூறி அரசு
ஊழியர்களையும் மக்களையும் ஏமாற்றினார்கள். ஆனால் ஒரு காலி பணியிடம் கூட
நிரப்பப்படவில்லை. மாறாக புதியதாக உருவான காலி பணியிடம் தான் சாதாரணமாக
நிரப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்திலும் பொய்யான தகவலே
வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை
கைவிட வேண்டும். பணி நியமனம் குறித்து ஆலோசனை நடத்தும் போது அரசியல்
தலைவர்களை அழைப்பதோடு, அரசு ஊழியர் சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை
நடத்த வேண்டும். இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார்.