Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சாலையில் வாழை மரம் கட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையில் வாழை மரம் கட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையில் வாழை மரம் கட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையில் வாழை மரம் கட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ADDED : செப் 20, 2011 09:09 PM


Google News

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அடுத்த மாடூர் நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதற்கு வாழை மரம் கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை - சேலம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்தபோது ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சாலையோரம் குழாய் அமைக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த சுந்தரேசபுரம் ஆற்றிலிருந்து செட்டிதாங்கல், அரியூர், ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள் ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றியபோது ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மீது சாலை அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் தற்போது வாகன போக்குவரத்து உள்ள நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் களில் அழுத்தம் தாங்காமல் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வந்தது.



தியாகதுருகம் அடுத்த மாடூர் பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்த பின் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி பள் ளம் உருவானது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டது. நான்கு வழிச்சாலை பணிகளில் எஞ்சிய சிமென்ட் கான்கிரீட் பள் ளத்தில் போடப்பட்டதால் அந்த இடம் மேடாக உள்ளது. சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சமூக நல ஆர்வலர்கள் சிலர் அந்த இடத்தில் ஒரு வாழை மரத்தை கட்டி எச்சரிக்கை செய்துள்ளனர். இப்பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us