Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை

கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை

கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை

கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லையில் பல்வேறு கட்சிகள், அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தென் மண்டல அமைப்பாளர் வக்கீல் சிவகுமார் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கூடன்குளம் அணு உலை பாதுகாப்பானது அல்ல. மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அணு கதிர் கசிவு ஏற்படும் பட்சத்தில் மக்களின் உயிருக்கு பேராபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அணு சக்தி மலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மொத்த விழுக்காட்டில் வெறும் 2.7 சதவீதம் ஆகும்.



ஆயிரம் மெகா வாட் மின்சாரத்திற்காக சுற்றுசூழல் சீர்கேட்டையும், கதிர்வீச்சு அபாயத்தையும் எதிர்கொள்வதை விட 2,040 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலையை அரசே நடத்த வேண்டும். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தி மனித குலத்திற்கு பேராபத்து உருவாக்கும் அணு சக்தி கொள்கையை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மனித உரிமைகள் மேம்பாட்டு கழகம்: மனித உரிமைகள் மேம்பாட்டு கழக இயக்குனர் ஜவகர் முத்து இஸ்ரேல் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கூடன்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அணு உலை ஆபத்தை அறிந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை மூடி வருகிறது. ஆனால் இந்தியாவில் புதிய அணு உலைகளை ஏற்படுத்துவது வேதனையானது. எனவே, கூடன்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு: இந்த அமைப்பின் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கூடன்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தினமும் வெளிப்படும் கதிர் வீச்சு நச்சு பொருட்களால் மக்கள் பாதிக்கப்படுவர். பெண்களுக்கு கருச் சிதைவு, குறைப்பிரசவம், உடல் ஊனமுற்ற குழந்தைகளும் பிறப்பர். அணு மின் நிலையங்கள் இயங்கும் பகுதிகளில் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு மற்ற இடங்களை ஒப்பிடும் போது அதிகாக இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, கூடன்குளத்தில் அணு மின் நிலையத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us