/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அம்பாசமுத்திரத்தில் நாளை ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சைஅம்பாசமுத்திரத்தில் நாளை ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சை
அம்பாசமுத்திரத்தில் நாளை ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சை
அம்பாசமுத்திரத்தில் நாளை ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சை
அம்பாசமுத்திரத்தில் நாளை ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சை
ADDED : செப் 19, 2011 11:55 PM
திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கு நவீன குடும்பநல சிகிச்சை முகாம் நாளை(21ம்தேதி) நடக்கிறது.
சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. கத்தி, ரத்தம் இன்றி 3 நிமிடங்களில் சிகிச்சை செய்யப்படுகிறது. மயக்க மருந்து கிடையாது. தழும்பு ஏற்படாது. ஆஸ்பத்திரியில் தங்க தேவையில்லை. உடனே வீடு திரும்பலாம். வழக்கம் போல வேலை செய்யலாம். சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அரசு ஈட்டுத்தொகை 1,100 ரூபாய், அழைத்து வருபவர்களுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம் ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராமதாஸ், மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் ஆறுமுகம், களப்பணியாளர்கள் செய்துள்ளனர்.


