66 பேரை பார்வையிழக்க செய்ததாக5 டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகை:சி.பி.ஐ., தாக்கல் செய்தது
66 பேரை பார்வையிழக்க செய்ததாக5 டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகை:சி.பி.ஐ., தாக்கல் செய்தது
66 பேரை பார்வையிழக்க செய்ததாக5 டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகை:சி.பி.ஐ., தாக்கல் செய்தது

மதுரை:முறையற்ற அறுவை சிகிச்சை செய்து, 66 பேரை பார்வையிழக்கச் செய்ததாக, ஐந்து டாக்டர்கள் உட்பட ஏழு பேர் மீது, மதுரை சிறப்பு செஷன்ஸ் கோர்ட்டில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.ஏழைகள் பார்வையிழப்பைத் தடுக்க, மத்திய அரசு வழங்கும் நிதியுதவியில், தமிழ்நாடு பார்வையிழப்புத் தடுப்புச் சங்கத்தின் மூலம், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாவட்டம் தோறும், கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக, அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு 1 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. இங்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்த 66 பேர் பார்வையிழந்தனர். பாதிக்கப்பட்டோர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.முதற்கட்டமாக ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், பெரம்பலூர் செயின்ட்ஜோசப் மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனின் போது, கிருமி தாக்குதலுக்கு உள்ளான 'ரிங்கர் லேக்டேட்' என்ற அமிலத்தை பயன்படுத்தியதாலும், கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஆபரேஷன் தியேட்டரை பயன்படுத்தியதாலும், நோய் தொற்றி 66 பேர் பார்வையிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர், திருச்சி செயின்ட்ஜோசப் மருத்துவமனைகளிலும், துறைமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க அலுவலகத்தில் இருந்தும், 52 ஆவணங்களை சி.பி.ஐ., பறிமுதல் செய்தது. பெரம்பலூரில் கண் சிகிச்சை நடத்த, மாவட்ட நிர்வாகத்திடம் ஜோசப் மருத்துவமனை முறையான அனுமதி பெறவில்லை என்பதும், அறுவை சிகிச்சைகள் செய்ய, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறவில்லை என்பதும் தெரிந்தது.
முறையான உபகரண வசதி இன்றி, சுகாதாரமற்ற ஆபரேஷன் தியேட்டரை பயன்படுத்தி 66 பேரை பார்வையிழக்கச் செய்ததாக, ஜோசப் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன்,59, உதவி இயக்குனர் டாக்டர் கே.அவ்வை,62, தலைமை நிர்வாக அதிகாரி ஜே.கிறிஸ்டோபர் ,57, பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனை டாக்டர் பி.அசோக், 37, திருச்சி டாக்டர் எச்.சுஜன்யா, 35, பெரம்பலூர் டாக்டர் தென்றல் பொன்னுதுரை, 29, ஆகியோர் மீது குற்றப்பத்திரிகையை, நீதிபதி ஜெகநாதன் முன், சி.பி.ஐ., டி.எஸ்.பி., பிரதீப்குமார் தாக்கல் செய்தார்.