/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"ரிங் ரோடு' அமைக்க வேண்டும்ஃபைனான்ஸ் சங்கம் தீர்மானம்"ரிங் ரோடு' அமைக்க வேண்டும்ஃபைனான்ஸ் சங்கம் தீர்மானம்
"ரிங் ரோடு' அமைக்க வேண்டும்ஃபைனான்ஸ் சங்கம் தீர்மானம்
"ரிங் ரோடு' அமைக்க வேண்டும்ஃபைனான்ஸ் சங்கம் தீர்மானம்
"ரிங் ரோடு' அமைக்க வேண்டும்ஃபைனான்ஸ் சங்கம் தீர்மானம்
ADDED : செப் 19, 2011 12:58 AM
திருச்செங்கோடு: 'போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, 'ரிங்ரோடு'
அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மகாசபைக் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஃபைனான்ஸ்சியர்ஸ் அசோசியேசன் சார்பில், 16வது
மகாசபை கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. சங்கத் தலைவர் அத்தியப்பன்
தலைமை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார். இணைச்செயலாளர்
அல்லிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் முத்துசாமி முன்னிலை
வகித்தார்.
கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி பங்கேற்று
பேசினார்.கூட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களின் நீண்ட நாள் கடன்களை
வசூல் செய்ய, தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து புதிய சட்டம் இயற்ற
வேண்டும். தனிநீதி மன்றங்கள் அமைத்து தரவேண்டும். காசோலைக் கடன் தொடர்பான
வழக்குகளை விசாரிக்க, உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு தனி
நீதிமன்றங்களை, அந்தந்த வட்டார பகுதிகளில் அமைக்க வேண்டும்.திருச்செங்கோடு
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சந்தைப்பேட்டை பகுதியில், புதிய பஸ்
ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். கனரக வாகனங்கள், நகர பகுதிக்குள் வராமல்
செல்லும் வகையில்,'ரிங்ரோடு'அமைக்க வேண்டும்என்பது உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில், ஆடிட்டர்கள் இளையப்பன்,
ஜெயவெங்கடசுப்ரமணியம், ரமணன், நாமக்கல் தாலுகா ஃபைனான்ஸ் அசோசியேஷன்
செயலாளர் சம்பத், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.