/உள்ளூர் செய்திகள்/மதுரை/உழவர் கூட்டமைப்புகள் மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு :கூடலரங்கம் தீர்மானம்உழவர் கூட்டமைப்புகள் மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு :கூடலரங்கம் தீர்மானம்
உழவர் கூட்டமைப்புகள் மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு :கூடலரங்கம் தீர்மானம்
உழவர் கூட்டமைப்புகள் மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு :கூடலரங்கம் தீர்மானம்
உழவர் கூட்டமைப்புகள் மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு :கூடலரங்கம் தீர்மானம்
ADDED : செப் 19, 2011 12:56 AM
மதுரை : உழவர் கூட்டமைப்பு மூலம் நீர்நிலைகளை புனரமைக்கவேண்டும்.
உழவர் விற்பனை கூடங்கள் மூலம் நேரடி விற்பனை நடக்க வேண்டும். அதற்கு கிராமங்களில் தகவல் மையம் அமைக்க வேண்டும் என மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் நடந்த கூடலரங்கத்தின் நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்விழா நேற்று ஹைடெக் அராய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கேரா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக வேளாண் கல்லூரி முதல்வர் வயிரவன் பங்கேற்றார். தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை முன்னிலைவகித்தார். கடல்வளப்பாதுகாப்பு குழு அமைத்து, அதன்மூலம் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். உழவர் கூட்டமைப்பு மூலம் நீர்நிலைகளை புனரமைக்க வேண்டும். உழவர் விற்பனை கூடங்கள் மூலம் நேரடி விற்பனை நடக்க வேண்டும். அதற்கு கிராமங்களில் தகவல் மையம் அமைக்க வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான சட்டத்தில்திருத்தம் கொண்டு வரவேண்டும். கண்மாய் வண்டல் மணலை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த கனிமவளச்சட்டத்தை எளிதாக்க வேண்டும். எச்.ஐ.வி., உள்ளோரை கொண்ட சுயஉதவிக்குழுக்களை உருவாக்க வேண்டும். சுற்றுலா சார்ந்த வாழ்வாதாரங்களை அரசு உருவாக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.மேம்பாட்டிற்கான தொடர்பியல் மையத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.