புதுச்சேரி:வில்லியனூர் கஸ்தூரிபா மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பில்
''விஞ்ஞானம் ஆக்கத்திற்கா? அழிவிற்கா?'' என்ற தலைப்பில் சிறப்பு
கருத்தரங்கம் நடந்தது.
தன்னார்வலர் நாகவள்ளி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தகுமாரி
கருத்தரங்கை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சார்லஸ்
கிறிஸ்தோபர் ராஜ் கருத்தரங்க நோக்கம் குறித்து பேசினார்.விழாவில் சிறப்பு
விருந்தினராக ஆசிரியர் ஆதோனிஷ், ''விஞ்ஞானம் ஆக்கத்திற்கா? அழிவிற்கா?''
என்பதை விளக்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு எடுத்துரைத்தார்.