ADDED : செப் 18, 2011 11:38 PM
புதுச்சேரி:இந்திய கம்யூ., முதலியார்பேட்டை கிளை மாநாடு கடலூர் ரோடு
சீனுவாசன் அரங்கத்தில் நேற்று நடந்தது.இடைகமிட்டி உறுப்பினர் சண்முகம்
தலைமை தாங்கினார்.
உறுப்பினர் ஏகாம்பரம் துவக்க உரையாற்றினார். மாநில
பொருளாளர் சலீம், ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிளை செயலாளர்
சக்திவேல் மாநாட்டு அறிக்கை வாசித்தார்.மாநாட்டில், முதலியார்பேட்டையில்
சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர்
வழங்க வேண்டும். சுடுகாட்டு பாதையை சீரமைக்க வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. முருகன் நன்றி கூறினார்.