உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: புதிதாக பெயர் சேர்க்கவும் அனுமதி
உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: புதிதாக பெயர் சேர்க்கவும் அனுமதி
உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: புதிதாக பெயர் சேர்க்கவும் அனுமதி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.
மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான, தேர்தல் முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடப்பு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி வார்டு வாரியாக, வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் பணி, இறுதி நிலையில் உள்ளது. சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் (வருவாய் கோட்டாட்சியர்), நாளை (19ம் தேதி) இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்புகள், வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளை, உரிய படிவங்களில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய உத்தரவுகள் வெளியிட்ட உடன், உள்ளாட்சி வாக்காளர் பட்டியலுக்கு, உரிய துணைப் பட்டியல் வெளியிடப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை, திருத்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும், உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைவர் ஆவர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனரால், உரிய அறிவிப்பு வெளியிடப்படும். தேவைப்படும் பொதுமக்கள், திருத்தங்கள் குறித்து விண்ணப்பிக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கை மனுக்களை, சட்டசபை தொகுதிகளின், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். மாறாக, இது போன்றவற்றை, மாநில தேர்தல் கமிஷனுக்கு அனுப்பக் கூடாது. தகுதியுடைய வாக்காளர்கள் எவரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருக்கக் கூடாது என, மாநில தேர்தல் கமிஷன் கருதுகிறது. இவ்வாறு மாநில தேர்தல் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.