5 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: உள்ளாட்சியில் வாக்களிக்க முடியுமா
5 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: உள்ளாட்சியில் வாக்களிக்க முடியுமா
5 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: உள்ளாட்சியில் வாக்களிக்க முடியுமா
சிவகங்கை: சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதவர்களை உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கலாமா என தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷனே பூத் சிலிப்களை அச்சடித்து வீடு வீடாக வழங்கியது.
எச்சரிக்கை: அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் எனவும், வாக்களிக்காதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்த நீக்கம் செய்யப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். எனினும் தமிழகத்தில் பூத் சிலிப் பெற்றவர்களில் 4.80 லட்சம் வாக்காளர்கள் கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஓட்டளிக்காததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. சரியான விளக்கம் அளிக்காதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிக்க முடியுமா: தேர்தல் கமிஷன் வாக்காளர்களுக்கு தற்போது அனுப்பியுள்ள நோட்டீசிற்கு விளக்கமளிக்க தேர்தல் கமிஷன் காலக்கெடு எதையும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பது குறித்தும் இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை. அதிகாரி ஒருவர் கூறுகையில், '' கடந்த தேர்தலில் ஓட்டளிக்காமல் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது பற்றி கமிஷன் கருத்து தெரிவிக்கவில்லை. இவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கலாமா என ஆலோசனை செய்து வருகிறது,'' என்றார்.