திறந்த நிலைப் பல்கலையில் கருத்தரங்கம்
திறந்த நிலைப் பல்கலையில் கருத்தரங்கம்
திறந்த நிலைப் பல்கலையில் கருத்தரங்கம்
ADDED : செப் 16, 2011 11:33 PM
சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில், அண்ணா துரையின், 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
பேராசிரியர் உதயகுமார் வரவேற்றார். பல்கலைக் கழக துணை வேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார். ஐக்கிய நாடுகளின் அரசியல் அலுவலர் முனைவர் கண்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராக பேசினார். 'அண்ணா ஒரு காவியம்' என்ற தலைப்பில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. பதிவாளர் சண்முகய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.