உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
UPDATED : ஜூன் 14, 2024 06:12 PM
ADDED : ஜூன் 14, 2024 03:42 PM

பஷானோ: ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரை சந்தித்தார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இரு தலைவர்களும் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி,கல்வி, பருவநிலை மாற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதன் பிறகு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார். இத்தாலி பிரதமர் மெலோனியையும் மோடி சந்தித்தார்.