/உள்ளூர் செய்திகள்/தேனி/உரத் தட்டுப்பாடு இல்லை விவசாயத்துறை தகவல்உரத் தட்டுப்பாடு இல்லை விவசாயத்துறை தகவல்
உரத் தட்டுப்பாடு இல்லை விவசாயத்துறை தகவல்
உரத் தட்டுப்பாடு இல்லை விவசாயத்துறை தகவல்
உரத் தட்டுப்பாடு இல்லை விவசாயத்துறை தகவல்
ADDED : செப் 16, 2011 11:22 PM
கம்பம் : தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் பொட்டாஷ் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் விவசாயிகள் மூடைக்கு ரூ. 425 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் பொட்டாஷ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாட்டால், விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து விவசாயத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இணை இயக்குநர் இமாம்தீன் கூறுகையில், 'மாவட்டத்திற்கு 400 மூடை பொட்டாஷ் வந்துள்ளது. தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ரூ. 425-க்கு ஒரு மூடை பொட்டாஷ் பெற்றுக் கொள்ளலாம். பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்துவித உரங்களும் கிடைக்கிறது. உரத் தட்டுப்பாடு கிடையாது,' இவ்வாறு கூறியுள்ளார்.