அரசு பஸ்களில் வசூல் மூணாறில் சாதனை
அரசு பஸ்களில் வசூல் மூணாறில் சாதனை
அரசு பஸ்களில் வசூல் மூணாறில் சாதனை
ADDED : செப் 16, 2011 11:22 PM
மூணாறு : கேரளா அரசு பஸ் டெப்போக்களில் ஒரு நாள் வசூலில் மூணாறு உதவி டெப்போ முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.கேரளா அரசு பஸ் உதவி டெப்போ பழைய மூணாறில் செயல் பட்டு வருகிறது.
தேனி,உடுமலைபேட்டை,பெங்களூரூ போன்ற ஊர்களுக்கும்,கேரளாவில் பிற பகுதிகளுக்கும் என தினமும் 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.ஓண விடுமுறை முடிந்து பணிகளுக்கும்,பள்ளிகளுக்கும் செல்வோரின் கூட்டம் பஸ்களில் அதிகமாக இருந்தது. இதனால் அரசு பஸ்களில் வருமானம் அதிகரித்தது.டெப்போக்களில் அனைத்து பஸ்களும் இயங்கும் போது ஒரு கி.மீ., கிடைக்கும் அதிக பட்ச சராசரி வருமானத்தை கணக்கிடப்படுவது வழக்கம். மூணாறு டெப்போவில் அனைத்து பஸ்களும் 11ஆயிரத்து 248 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டது. இதன் மூலம் ரூ, 4லட்சத்து 57 ஆயிரத்து 344 வருமானம் கிடைத்தது. ஒரு கி.மீ., சராசரி வருமானம் ரூ. 41 கிடைத்தது.மாநிலத்தில் இது சாதனையாகும்.மூணாறு உதவி டெப்போவில் அதிக வருமானம் கிடைத்து வந்தாலும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் டெப்போவில் இல்லை.