/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்புகூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : செப் 14, 2011 01:16 AM
திருச்செங்கோடு: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பஸ்சை, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில், மக்கள் இரண்டு மணி நேரமாக சிறைபிடித்து வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் செந்தில்ராஜா என்ற தனியார் பஸ்ஸில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்ததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
இரண்டு மணி நேரம், தனியார் பஸ் மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டில்நிறுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் செந்தில்ராஜா என்ற தனியார் பஸ்ஸில், சேலத்தில் இருந்து ஈரோடு செல்ல, 20 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு செந்தில்ராஜா தனியார் பஸ்சில், மல்லசமுத்திரத்தை சேர்ந்த பயணிகள் வந்துள்ளனர். அவர்களிடம், 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்தனர். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும், பஸ்சை சிறை பிடித்தனர்.தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும், 'இதுபோன்ற தவறு இனி ஏற்படாது' என உறுதி அளித்ததை தொடர்ந்து, சிறைபிடித்து வைத்திருந்த பஸ்சை விடுவித்தனர்.