/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூருக்கு வந்து விட்டதுஇலவச மிக்சி, கிரைண்டர்கடலூருக்கு வந்து விட்டதுஇலவச மிக்சி, கிரைண்டர்
கடலூருக்கு வந்து விட்டதுஇலவச மிக்சி, கிரைண்டர்
கடலூருக்கு வந்து விட்டதுஇலவச மிக்சி, கிரைண்டர்
கடலூருக்கு வந்து விட்டதுஇலவச மிக்சி, கிரைண்டர்
ADDED : செப் 14, 2011 12:07 AM
முதுநகர்:மாவட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் கட்டமாக மூன்று கிராமங்களைச்
சேர்ந்த 400 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச கிரைண்டர், மிக்சி மற்றும்
மின் விசிறி வழங்கப்பட உள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைத்து பச்சை நிற
ரேஷன் கார்டுகளுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள்
வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தை நாளை (15ம் தேதி) திருவள்ளூர்
மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து 16ம் தேதி
முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் பயனாளிகளுக்கு
வழங்குகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 16ம் தேதி கடலூர் தாலுகா
நாகப்பனூர், நடுக்குப்பம் மற்றும் சிதம்பரம் தாலுகா தென்தலைக்குளம் ஆகிய
மூன்று கிராமங்களைச் சேர்ந்த 400 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர்
மற்றும் மின்விசிறி வழங்கப்பட உள்ளது.இதற்குத் தேவையான 400 மிக்சி,
கிரைண்டர்கள் நேற்று காலை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்
இருந்து லாரிகள் மூலம் கடலூர் முதுநகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழக குடோனுக்கு கொண்டு வரப்பட்டது.அதனை சமூக நலத்திட்ட தாசில்தார்
மோகன், குடிமைப் பொருள் தனி தாசில்தார் விஜயா ஆகியோர் சோதனை செய்து வாங்கி
வைத்தனர். மின் விசிறிகள் இன்று கொண்டு வரப்படுகிறது.