ADDED : செப் 13, 2011 09:20 PM
புதுடில்லி : காந்தியவாதி அன்னா ஹசாரே, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது கண்ணியத்துடனும் அதேசமயம் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது, அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று அவர் கூறினார்.