நெல் கொள்முதல் செய்யாததால் தேக்கம்மழையில் நனைந்து 5,000 மூட்டைகள் சேதம்
நெல் கொள்முதல் செய்யாததால் தேக்கம்மழையில் நனைந்து 5,000 மூட்டைகள் சேதம்
நெல் கொள்முதல் செய்யாததால் தேக்கம்மழையில் நனைந்து 5,000 மூட்டைகள் சேதம்
ADDED : செப் 13, 2011 12:51 AM

விருத்தாசலம் :விருத்தாசலம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த, 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சி.கீரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு, 400 மூட்டை (40 கிலோ மூட்டை) கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக, சரிவர நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.இதனால், விவசாயிகள் கொண்டு வந்த, 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பிரித்து, கொள்முதல் நிலைய வளாகத்தில், திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், இப்பகுதியில் கனமழை பெய்ததால், திறந்த வெளியில் கொட்டப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள நெல், மழையில் நனைந்தது. மழை பெய்து இரு நாட்கள் கடந்த நிலையில், தற்போது நெல் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வார்களா என, விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:தொடக்கத்தில், நாள் ஒன்றுக்கு 1 லட்ச ரூபா#க்கு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபா#க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, சரிவர நெல் கொள்முதல் செய்யவில்லை.நாள் ஒன்றுக்கு, 400 மூட்டைகளுக்கு மேல் வரத்து இருந்தும், அதிகாரிகள் குறைந்த அளவே நிதி ஒதுக்குவதால், கொள்முதல் செய்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது. மேலும், இதுபோன்று எதிர்பாராத விதமாக மழை பெய்தால், நெல் மூட்டைகள் சேதமடைந்து பாதிக்கப்படுகிறோம்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
பேரளையூர், கொடுமனூர் , காவனூர் கொள்முதல் நிலையங்களிலும், இதே நிலை தான் உள்ளது. கொள்முதல் தொகையை அதிகரித்து, தினமும் அனைத்து விவசாயிகளிடமிருந்தும், நெல் மூட்டைகளை தேக்கமின்றி கொள்முதல் செய்ய, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.